‘இது என்ன அர்ஜுன் சார்க்கு வந்த சோதனை ‘ விரைவில் பாரதி கண்ணம்மா 2 Climax – காரணம் என்ன தெரியுமா ?

0
1810
Barathikannamma
- Advertisement -

பாரதி கண்ணம்மா 2 சீரியல் விரைவில் முடிய இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வி ஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

-விளம்பரம்-

பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயர்களையே மட்டும் இல்லாமல் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா 2 சீரியல்:

பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். சீரியலில் பாரதி பெரிய வீட்டு பிள்ளை. கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார். இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா. இவர் எங்கு செல்வது என்று அலைந்து கொண்டு இருக்கும் போது தான் கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக விபத்தில் கண்ணம்மா இறந்து விடுகிறார். கண்ணம்மா குடும்பத்தை காப்பாத்த சித்ரா கண்ணம்மாவாக மாறுகிறார். பின் பாரதி -கண்ணம்மா அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால், தொடக்கத்திலே இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.

சீரியலின் கதை:

இப்படி போன இருவருக்கும் இந்த சீசனுக்கு சம்மந்தம் இல்லாமல் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.
தற்போது சீரியலில் பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்ய சௌந்தர்யா ஏற்பாடு செய்கிறார். ஆனால் சௌந்தர்யா, வெண்பாவிற்கு தெரியாமலேயே கண்ணம்மாவை கோயிலுக்கு வரச் சொல்லி எப்படியோ அவரை சம்பாதிக்க வைத்து பாரதி திருமணம் செய்து கொள்கிறார். இது இவர்களுடைய இருவீட்டாருக்கும் தெரிந்தவுடன் கடுமையாக கோவிலில் பேசி திட்டுகிறார்கள். எதுவும் பேச முடியாமல் பாரதியும் கண்ணம்மாவும் அமைதியாக நிற்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் டீவ்ஸ்ட்:

மேலும், சௌந்தர்யாவும், கண்ணம்மாவின் அப்பாவும் வீட்டிற்கே வராத என்று திட்டி விட்டு சென்று விடுகிறார்கள். இனி வரும் காலங்களில் பாரதி கண்ணம்மாவை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்வார்களா? வெண்பா இவர்களைப் பிரிக்க என்னெல்லாம் செய்வார்? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 சீரியலின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீரியலின் கிளைமேக்ஸ்:

அதாவது, பாரதி கண்ணம்மா 2 சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக போஸ்ட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலை விரைவாக முடித்துவிட்டு கிழக்கு வாசல் தொடர் அல்லது பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பதாக விஜய் டிவி அறிவித்திருக்கிறது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக ஏற்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் சீரியல் விரைவாக முடிவடைய இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது

Advertisement