பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு முதல் போட்டியாளராக தேர்வாகியிருக்கும் பாரதி கண்ணம்மா நடிகர் – யார் என்று பாருங்களேன்

0
313
- Advertisement -

‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சிக்கு தேர்வான முதல் போட்டியாளர் குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன் களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

கமல் விலகல்:

இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். எனவே, அவரை வைத்து விரைவில் ப்ரோமோ சூட்டும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 8:

அதனைத் தொடர்ந்து, மறுபுறம் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், பிரபல யூடுயூபர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்த வகையில் ரியாஸ் கான், அமலா ஷாஜி, ரோபோ சங்கர், பாடகி கல்பனா, பப்லு ப்ரிதிவிராஜ், நடிகர் அஸ்வின் என்று சமீபத்தில் பல பெயர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது.

-விளம்பரம்-

முதல் போட்டியாளர்:

தற்போது, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து பிரபலமாகிய நடிகர் அருண் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. அருணின் முழு பெயர் அருண் பிரசாத். இவர் 2011 ஆம் ஆண்டு ‘நிகழ் காலம்’ என்ற குறும்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தில் கிஷோர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் இவர், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அர்ச்சனா ரெக்கமென்டேஷன்:

தற்போது இவரிடம் முதல் கட்டமாக சேனல் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என தெரிகிறது. மேலும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் இவரும் காதலித்து வருவதாக வதந்திகள் வந்த நிலையில், அர்ச்சனாவின் ரெக்கமென்டேஷனில் தான் அருணுக்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே, வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement