பாரதிகண்ணம்மாவில் இருந்து இதனால் தான் விலகினேன் – பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

0
590
anjali
- Advertisement -

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகியதற்கு இதுதான் உண்மையான காரணம் என்று அஞ்சலி கண்மணி மனோகரன் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் முதலில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் வெண்பா- ரோகித் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் ஒரே ஹாஸ்பிடலில் பாரதி, கண்ணம்மா வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் ஹைஜாக் செய்கிறது. மருத்துவமனையில் கண்ணம்மா, லட்சுமி, அகிலன், அஞ்சலி உட்பட பலர் மாட்டி கொள்கிறார்கள்.

சீரியலின் கதை:

-விளம்பரம்-

இதை டிவியில் பார்த்த பாரதியின் குடும்பம் பதறிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பிறகு பாரதி நான் எப்படியாவது அவர்களை காப்பாற்றுகிறேன் என்று கிளம்புகிறார். தீவிரவாதி கும்பலிடம் இருந்து பாரதி தன் குடும்பத்தையும், மருத்துவமனையில் உள்ளவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில் பாரதி வெற்றி பெறுவாரா? இல்லையா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கண்மணி மனோகரன் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது பலரும் அறிந்த ஒன்றே. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் கண்மணி நடித்து இருந்தார். பின் பாரதியின் தம்பி அகிலனை திருமணம் செய்து கொள்கிறார். திடீரென்று இவர் சீரியலில் விலகுவதாக அறிவித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

கண்மணி அளித்த பேட்டி:

தற்போது இவர் ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கண்மணி பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் விலகியது குறித்து கூறியிருந்தது, அஞ்சலி கேரக்டருக்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன். அஞ்சலியாக மூன்று வருடங்கள் கடந்த உடன் அடுத்த கட்டங்களுக்கு செல்ல முடிவு செய்தேன். மேலும், நான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியது அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலுக்காக தான். அந்த சீரியலில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement