சங்கமம்லா வச்சி என்ன பயன் – TRPயில் சன் டிவியின் இந்த ஒரு சீரியலை விஜய் டிவியால அடிக்க முடியலயே.

0
7154
raja
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அதே போல barcindia என்ற வலைதளத்தில் வாரம் தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் டிவி நிகழ்ச்சிகளில் TRP ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் . அந்த வகையில் கடந்த மார்ச் 21 முதல் 26 வரையிலான தேதிகளில் Trp ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் தொலைக்காட்சி பட்டியலில் முதல் இடத்தில் சன் டிவி ரோஜா சீரியல் இடம்பெற்றுள்ளது. அதே போல டாப் 5 சேனலில் சன் டிவி தான் அதிக TRP புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்காவிடம், ரோஜா சீரியலுக்கு தற்போது எந்த சீரியல் போட்டியாக டப் கொடுக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா, செம்பருத்தி சீரியல் தான் என்று கூறி இருந்தார்.

ஆனால், செம்பருத்தி சீரியல் இந்த லிஸ்டில் கூட இல்லை. அதே போல கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் TRP யில் சரிந்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக இரண்டு சீரியலையும் ஒன்றிணைத்து மேகா சங்கமம் என்று ஒளிபரப்பினார்கள். அப்படி இருந்து பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியளையும் இணைத்தும் கூட சன் டிவியின் ஓரு சீரியலை அடிக்கமுடியவில்லை.

-விளம்பரம்-
Advertisement