அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண ஓகேவான்னு போன் பண்ணி கேட்டாங்க – பாரதி கண்ணம்மா நடிகையின் ஷாக்கிங் வீடியோ.

0
1003
- Advertisement -

பாரதி கண்ணம்மா 2வில் நடிக்கும் நடிகை சின்னத்திரையில் நடக்கும் அட்ஜ்ஸ்ட்மென்ட் பற்றபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார்கள். பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது பாகம் தொடங்கியது முதலே சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா விபத்தில் மரணிக்க சித்ரா கன்னமாவாக மாறுகிறார். அதற்கு பிறகு பாரதி – கண்ணம்மா சாதித்து தொடக்கத்திலேயே மோதல் ஏற்படுகிறது. இப்படி போன சீசனாக்கும் இந்த சீசனுக்கு சம்மந்தம் இல்லாமல் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீப காலங்களில் வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் அதிகமான மீடூ புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.

நடிகை ரேஷ்மா பிரசாத் கூறிய அதிர்ச்சி தகவல் :

அந்த வகையில் தான் பாரதி கண்ணம்மா பகுதி 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த சம்பவத்தை ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் பேசுகையில் ” சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட அட்ஜ்ஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் இந்த கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்று கூறினார்கள். பல பேர் இதைத்தான் கேட்டார்கள் நான் அட போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வந்து விட்டேன்.

-விளம்பரம்-

நேரடியாக கேட்டார்கள் :

அப்படி அட்ஜ்ஸ்ட்மென்ட் பண்ணி கிடைக்கின்ற கதாபாத்திரம் எனக்கு தேவை இல்லை. நமக்கு வாய்ப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். மேலும் அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கூறினார் “அதாவது அவர்கள் அனுப்பும் விபரத்திலேயே உங்களுக்கு அட்ஜஸ்மென்ட் ஓகேவா? இல்லையா? என்று கேட்பார்கள். எனக்கு அப்படி வந்த போது நோ என்று அனுப்பியிருந்தேன். ஆனால் அப்படி வேண்டாம் என்று கூறியும் தொலைபேசியில் அழைத்து என்னிடம் உங்களுக்கு அட்ஜஸ்மென்ட் ஓகேவா? என்று கேட்டார்கள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார் ரேஷ்மா பிரசாத்.

பாரதி கண்ணம்மா 2 பாகம் கடந்த 1 மதத்திற்கும் முன்னர் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் பாரதிக்கு தோழியாக வரும் மது கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பிரசாத் நடிக்கிறார். இதனால் இவருக்கான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் ரேஷ்மா தனக்கு நடந்த அட்ஜ்ஸ்ட்மென்ட் பற்றி கூறியிருப்பது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement