தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்துள்ளனர். அந்த வகையில் சிவர்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ திரைப்படமும் ஒன்று. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் ஒரு குயூட்டான குழந்தை நடித்திருப்பார். அவர் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.
இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது . இதில் கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தை வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகரான ஷாமின் குழந்தைதான்.
நடிகர் ஷாம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார்.மேலும் நடிகராக மட்டுமல்லாமல் இவர் பின்னணி பாடகரும் ஆவார் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ ‘ படத்தில் ‘மால்தோ’ பாடலை பாடியிருக்கிறார். மேலும் நடிகர் ஷாம் சௌமியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒரு மகளான ரக்ஷனா தான் பாரதி கண்ணம்மா சிரியலில் நடித்து வருகிறார்.