""
-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு தொலைக்காட்சி

அட, பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் இந்த குழந்தை இந்த பிரபல நடிகரின் மகள் தானா ?

0
12658
kannamma
-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது . இதில் கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தை வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகரான ஷாமின் குழந்தைதான்.

-விளம்பரம்-

நடிகர் ஷாம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். அதன்பின்னர் இவர் தென்றல், பாசமலர், மரகதவீணை, யாரடி நீ மோகினி, சரவணன் மீனாட்சி 2 போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் இவர் பின்னணி பாடகரும் ஆவார் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படத்தில் என்ற பாடலை பாடியிருக்கிறார் மேலும் நடிகர் ஷாம் சௌமியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் அதில் ஒரு மகள் தான் தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news