விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.
இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பரீனா சமீபத்தில் தனது வயிற்றில் கூட அழகா மருதாணி வைத்து வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார்.
இந்த போட்டோ ஷூட்டை பார்த்து பலர் லைக்ஸ் போட்டாலும் ஒரு சிலர் பரீனாவை திட்டி தீர்த்தனர். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படமால் தனது pregnancy போட்டோ ஷூட்டை நடத்தி வரும் பிரவீனாவிடம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர், ஒரு முஸ்லிமா நீங்க ரொம்ப தைரியமா இருக்கீங்க. எப்படி உங்க குடும்பத்த சமாளிக்கிறீங்க என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த பரீனா, மதங்களின் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்மைப் பற்றி குறை சொல்லத்தான் அதெல்லாம் உருவாக்கப்பட்டது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேற வேண்டும். உங்கள் மனம் சொல்வதை கேட்டு சென்று கொண்டே இருங்கள் என்று கூறி இருந்தார். அதே போல இன்னொருவர், உங்க வயிற்றை காண்பிப்பதை நிறுத்துங்க. ஏன்னா எல்லாரும் கண்ணு வைக்கறாங்க என்று கூறியதற்கு, நம்ம சுற்றி நல்ல எண்ணம் இருக்கும் போது எதுவும் பண்ண முடியாது என்று கூறியுள்ளார். அதே போல இனொருவர் நீங்கள் தினமும் 5 முறை பிரார்த்தனை செய்வீர்களா என்று கேட்டதற்கு, நான் தினமும் யோகா செய்வேன் என்று கூறியுள்ளார்.