நிறத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு பதிலடி – சுந்தரிகும், கண்ணம்மாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

0
616
gabe
- Advertisement -

சுந்தரி கேப்ரில்லா, கண்ணம்மா வினுஷா கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் பிளாக் பியூட்டிகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் கேப்ரில்லா மற்றும் வினிஷா தேவி. இவர்கள் இருவருமே டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள். கேப்ரில்லா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமானார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இளையராஜாவிற்கு கிடைத்த Mp பதவி – அன்று ஜேம்ஸ் வசந்தன் சொன்னது இன்று பலித்துவிட்டது. அவரின் சூசக கேலி பதிவு.

சுந்தரி சீரியல்:

இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. டி.ஆர்.பியில் சுந்தரி சீரியல் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு கேப்ரில்லாவின் நடிப்பு மிக முக்கியமான காரணம் என்றே கூறலாம். இந்த வெற்றிக்கு பின்பு கேப்ரில்லா அளித்த பல பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் தனது நிறத்தால் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பாரதி கண்ணம்மா சீரியல்:

ஆனால், இன்று அதே நிறம் தான் அவருக்கு சுந்தரி ரோலை கொடுத்து இருக்கிறது என்றும் கூறி இருந்தார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் பாரதிகண்ணம்மா சீரியல் புது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இவரும் டிக் டாக் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஹினி விலகிய பின் வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது.

கேப்ரில்லா-வினுஷா:

இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருவருமே சின்ன திரையில் நாயகிகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், இவர்கள் இருவரும் தங்களுடைய நிறத்தால் பல கேலி, கிண்டல்களை சந்தித்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கேப்ரில்லா-வினுஷா நடிக்கும் படம்:

அதாவது, கேப்ரில்லா-வினுஷா இருவரும் இணைந்து கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் இவர்கள் இருவரும் மீனவர் பெண்ணாக நடித்து இருக்கின்றார்கள். இவர்களுடன் மைக்கேல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிற.து இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement