விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிதாசன் காலனி சீரியலின் கதாநாயகியின் அக்காவும் பிரபல சீரியல் நடிகை தான் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சமீப காலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் இருக்கின்றது.
இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிற்காக வித்தியாசமான புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பி ரேட்டில் முன்னிலையில் வருகிறது. தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் பாரதிதாசன் காலனி. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிந்த பின்பு இந்த சீரியல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசன் காலனி சீரியல்:
ஒரு காலனியில் குடியிருக்கும் மக்களை சுற்றி நகரும் கதை தான் பாரதிதாசன் காலனி. இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராம் சாய். இவர் இதற்கு முன்பு தமிழ் மற்றும் மலையாள தொடர்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் மலையாளத்தில் ஒளிபரப்பான மௌனராகம் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்.
ஐஸ்வர்யா ராம் சாய் நடித்த சீரியல்கள்:
அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்து இருந்தார். தற்போது பாரதிதாசன் காலனி என்ற சீரியல் மூலம் ஐஸ்வர்யா ராம் சாய் பிரபலமாக திகழ்கிறார். இவருக்கு 23 வயது தான் ஆகிறது. இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி பதிவிடும் வீடியோ புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஐஸ்வர்யா ராம் சாய் பதிவிட்ட வீடியோ:
அது மட்டும் இல்லாமல் இவரை இன்ஸ்டா பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். தற்போது ஐஸ்வர்யா பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர டிரண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஐஸ்வர்யா ராம் சாய் சமீபத்தில் தன்னுடைய அக்காவுடன் சேர்ந்து துபாய் சென்றிருக்கிறார். அங்கு அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவரின் அக்கா வேற யாரும் இல்லைங்க, நாதஸ்வரம் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மகா தான்.
ஐஸ்வர்யா ராம் சாய் அக்கா:
இவருடைய உண்மையான பெயர் கீதாஞ்சலி. இயக்குனர் திருமுருகன் சீரியல் மூலம் தான் கீதாஞ்சலி சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண வீடு, ராஜா ராணி போன்ற தொடரிலும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு கீதாஞ்சலி நடிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது கீதாஞ்சலி தன்னுடைய கணவருடன் துபாயில் இருக்கிறார். மேலும், ஐஸ்வர்யா ராம் சாய் பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இருவரும் அக்கா – தங்கையா? என்ற ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.