பாரதி கண்ணம்மா நாடகம் முலம் பிரபலமானவர் தான் அகிலன். அவர் வெளி உலகத்திற்கு தெரியாமல் திருமணத்தை முடித்துள்ளார். பொதுவாகவே விஜய் டிவியில் கலக்கி வந்த பல நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் தொடங்கி தற்போது இருக்கும் குக் வித் கோமாளி புகழ் வரை என பலரும் வெள்ளித்திரையில் களமிறங்கி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமான நடிகர் அகிலன் தற்போது ஹீரோவாக சினிமா உலகில் களம் இறங்கி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. மேலும், இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற நிலையில் அதில் இருந்து விலகி விட்டார்.
பாரதி கண்ணம்மா கதை:
தமிழ் சீரியல்களில் அதிகமான முறை ட்ரெண்டிங்களிடம் பிடித்த சீரியல் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த சீரியல் ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவில் வெளியே வராமல் இருந்ததாலும் பிறகு கண்ணம்மா கையில் ஒரு பையைக் கொடுத்து வெளியே பல மாதங்களாக சுற்றிக் கொண்டிருந்ததை வைத்து பல மீம்ஸ்கள் கிரியேட் செய்யப்பட்டது இந்த சீரியலுக்கு பெரும் பிரபலமானது. இதில் DNA லேட்டஸ்ட் என்ற வார்த்தை மையமாக வைத்து தான் இந்த கதை முழுவதும் நகர்ந்து வந்தது. அதில் நடிகர் அகிலன் அவர் பாரதியின் தம்பியாக நடித்து வந்தார்.

இவரின் திரைப்பயணம்:
இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நிலையில் அதன் பின் நடிகர் அகிலன் விஷாலின் நடிப்பு வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் விஷாலின் தங்கையை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த சில திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் ஆகா சோஷியல் மீடியா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாகவும் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படத்தை பதிவிடுவது மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
View this post on Instagram
திருமண வாழ்க்கை:
இந்த நிலையில் அவர் தற்பொழுது சோசியல் மீடியாவில் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படமானது அவரது ரசிகர்களே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் அது என்னவென்றால் அவரது நீண்ட நாள் காதலியான அக்ஷயா முரளிதரனை திருமணம் செய்து புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டனர். யாருக்கும் தெரியாமல் அமைதியாக திருமணத்தை முடித்து முடித்து விட்டீர்கள் உங்களுக்கு சரியான பெண் இவர் தான் என்று கூறியும் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இவரின் திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.






