ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறித்து தொகுப்பாளர் பாவனா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியை பாவனா தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து அவரிடம் பேட்டி எடுக்கப் பட்டிருந்தது.
அதில் அவர் கூறியிருந்தது, ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. நான் நல்லா பண்ணுவேன் என்கிற நம்பிக்கையில் என்கிட்ட துணிந்து இந்த பொறுப்பை கொடுத்ததற்காக முதலமைச்சர், பிரதமர் அலுவலக உறுப்பினர்களுக்கு தான் என் முதல் நன்றியை தெரிவிக்கனும். ஆரம்பத்தில் நானும், சாரு சர்மா சாரும் இணைந்து தொகுத்து வழங்கற மாதிரி இருந்தது. பின் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் என்பது மிகப்பெரிய ஈவண்ட். அது நம்ம நாட்டில் அதுவும் நம்ம சென்னையில் நடப்பது மிகப்பெரிய விஷயம்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம்:
கிரிக்கெட்டில் வேர்ல்ட் கப் மேட்ச் ஓப்பனிங் நம்ம ஊரில் நடந்தா நமக்கு எவ்வளவு சந்தோஷமும், பெருமையும் இருக்குமோ அப்படித்தான் இந்த நிகழ்வும். 188 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். இது எவ்வளவு பெரிய விஷயம். இதற்காக பல மாதங்களாக பலர் ஹார்ட் வொர்க் பண்ணி இருந்தார்கள். அவர்களுடைய உழைப்பிற்கான பிரதிநிதியாக தான் மேடையில் நின்று இந்த நிகழ்ச்சியைத் வழங்கினேன். இதுவரை எத்தனையோ ஈவென்ட் பண்ணி இருந்தாலும் 50 பேர் முன்னாடி பேசணும் போது கொஞ்சம் பதட்டம் எனக்குள் இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது எனக்கு எந்த பதட்டமும் இல்லை.
கடவுள் நம்பிக்கை :
கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். என்னை பொறுத்தவரை கடவுளே என் கையை பிடித்து நிகழ்ச்சியை தைரியமாக பண்ண வைத்த மாதிரி தான் உணர்கிறேன். துளி அளவு கூட நான் பயப்பட இல்லை. ரொம்ப ரிலாக்ஸ் ஆக தான் இருந்தது. அந்த மேடையில் லிடியன் நாதஸ்வரத்திடம் பேசிட்டு நடந்து வரும்போது ஜேம்ஸ் வசந்தன் சார் அவருடைய டீமுடன் அங்கே இருந்தார். அவர் என்னைப் பார்த்து, பாவனா சூப்பரா பண்ற அற்புதம் என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்தது. பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். வெவ்வேறு நாடுகளிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள வந்த பலர் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு நல்லா இருக்கு என்று சொன்னார்கள்.
நிகழ்ச்சி குறித்து பாவனா சொன்னது:
மேலும், இந்த நிகழ்வை கண்டிப்பாக நான் தொகுத்து வழங்க போகிறேன் என்கிற தகவல் எனக்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். ஸ்கிரிப்ட் எல்லாம் கடைசி நேரத்தில் தான் பார்த்தேன். தயார் ஆகுற அளவுக்கான டைம் எல்லாம் இல்லை. காஸ்டியூம் பொருத்தவரை என் அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும். அவர்களே ஸ்டேஜ் இந்தக் கலரில் தான் இருக்கும் என்று முன்னாடியே யூகித்து பிங்க் நிறம் தான் செட்டாகும் என்று சொன்னாங்க. அதே மாதிரி சேலை தான் கட்டப் போகிறேன் என்று ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டேன். அம்மாவே புடவையை செலக்ட் செய்து ரெடி பண்ணி வைத்து இருந்தார்கள்.
பாவானிவிற்கு குவியும் வாழ்த்து:
அது ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆனது. எப்பவும் என் பிழையை சுட்டிக் காட்டுவது என் குடும்பம் தான். அதே மாதிரி இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் அம்மா, அப்பா, பாட்டி என் பிழையை மறக்காமல் சுட்டிக் காட்டி இருந்தார்கள். பலருக்கும் நான் இவ்வளவு ஆங்கிலம் பேசுவேன் என்று தெரியாது. இப்படி தமிழ் உச்சரித்து பேசுவேன் என்றும் தெரியாது. அதனால் பலரும் ரொம்ப நல்லா பண்ணி இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நம்மளுடைய பாலோவர்ஸ், ஃபேமிலி, நண்பர்கள், பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டிப் பேசுவது வேற. ஆனால், நம்மை பாலோ பண்ணாதவங்க நம்முடைய வேலையை பார்த்துவிட்டு பக்கம் பக்கமாக எழுதி பாராட்டுவது பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு. நம்ம கிட்ட இருந்து தான் செஸ் விளையாட்டு உருவானது என்ற விளக்கத்தை முதலமைச்சர் சொல்லும்போது ரொம்ப பெருமையாக இருந்தது என்று பாவனா பல நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.