சர்ச்சையை கிளம்பிய இரண்டாம் குத்து படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்துள்ள பாவனா – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.

0
47061
bhavana
- Advertisement -

மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.’விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ லான்சை கூட மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார் பாவனா. இடையில் இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராகவும் பங்கேற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் இரண்டாம் குத்து படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்துள்ளார். தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அடல்ட் காமெடி திரில்லர் படமாக வெளிவந்த இந்த படத்தில் ஆபாச காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும் இருந்ததால் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் இளைஞர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இரண்டாம்குத்து என்ற பெயரில் எடுத்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். மேலும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி இருந்தது இந்த டீசரில் எக்கச்சக்க ஆபாச காட்சிகளும் வசனங்களும் இருந்ததால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்ப்பு எழுந்தது பிரபல திரைப்பட இயக்குனரான பாரதிராஜா கூட இந்த படத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து வீராதி வீரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாவனா பாடி இருக்கிறார். இதன் மூலம் சினிமாவில் கால் பதித்து இருக்கிறார் பாவனா பாலகிருஷ்ணன்.

-விளம்பரம்-

Advertisement