தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.
https://twitter.com/Bhavna__B/status/1241259191831937025
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க பாவனா எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும், இவரை ஒரு சிலர் பெண் அனிருத் என்று கிண்டல் செய்திருப்பதும் உண்டு. இந்த நிலையில் இந்த கிண்டல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதில் அளித்திருந்த பாவனா, எனக்கும் அனிருத்துக்கும் ஒரே மாதிரி சாயல் இருக்கிறது என்று எனக்கும் தோன்றுகிறது. அதுகுறித்து கிண்டல் செய்பவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இங்கே எல்லோருக்குமே ஒரு அடையாளம் இருக்கிறது.
https://www.instagram.com/p/B_Y4TMqDTqi/
மேலும், அது என்னை குத்தி காமிக்கும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. கேளி செய்யுங்கள் ஆனால் அதை மட்டுமே செய்யாதீர்கள் என்று கூறிய பாவனா அனிருத்தை போன்று லுக் வந்ததுபோல அவருடைய திறமையும் நமக்கு வந்திருக்கக் கூடாதா என்று நான் நினைத்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார். நிலையில் பாவனாவிற்கு ஆதரவாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாகவும், பாய்ஸ் vs கேர்ல்ஸ் போட்டியாளராகவும் இருந்த ஐஸ்வர்யா நீண்ட பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அதில், பாவனாவை அனிருத்துடன் ஒப்பிட்டு ஒரு சில மீன்களை நான் கண்டேன் ஆரம்பத்தில் அது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், பாவனாவின் பல்வேறு பதிவுகளில் அனிருத் பெயரை கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனால்தான் இந்த பதிவை நான் போடுகிறேன். நான் தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு முதல்வர்கள் மாறியிருக்கிறார்கள், பல்வேறு வரலாற்று போராட்டங்கள் நடைபெற்று இருக்கிறது, பல்வேறு சிறந்த நபர்களை நாம் இழந்திருக்கிறோம், தொகுப்பாளர்கள் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பபெண் தொகுப்பாளினிகள் மற்றும் கேலி செய்வது நிறுத்தப்படவில்லை.
https://www.instagram.com/p/B_ZG0lLhUEF/
ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் ஒருவரது உடல் குறித்து என்று செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள் ஒருவர் தன்னுடைய திறமையால் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர அவர்களது உடல் அமைப்பினால் கிடையாது ஒரு பெண் என்பவள் அவருக்கே உரித்தான சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு அற்புதம் என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்த பாவனா, என்னை கிண்டல் செய்வது நிறைய ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் கூட வாடிக்கையாக ஆகிவிட்டது. என்னை ஆண் என்றும் திருநங்கை என்றும் ஆம்பள அனிருத்துக்கு என்றும் என்னுடைய உடலை கேலி செய்திருக்கிறார்கள். ஆனால், நான் மிகவும் வலிமையாகவும் ஒரு சக்திவாய்ந்த நபராகவும் எழுந்திருக்கிறேன். என் தலையை நிமிர்ந்து நான் மேலும் முன்னேறி செல்வேன் என்று பதிவிட்டுள்ளார் பாவனா.


