விஜய் டிவி பாவனாவா இது ? அவரின் திருமணத்தில் எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
930
bhavana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். ஆனால், மக்களின் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் என்றால் சிலரே இருப்பார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா.

-விளம்பரம்-

பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாவனாவுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை பாவனா. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், குழந்தை பற்றி கேட்டிருந்தார்.

- Advertisement -

தவறு, எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், இவர் தான் அது’ நாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு பதில் அளித்து இருந்தார் பாவனா. அதே போல சமீப காலமாக பாவனா விஜய் டிவி நிகழ்ச்சியில் வருவது இல்லை. இதுகுறித்து பேசிய பாவனா ‘ டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங்காக கால் பண்ணும்போது ஆரம்பத்தில் எனக்கு பயமாக இருந்தது. ஒரு தயக்கத்துடன் தான் நான் மும்பை போனேன். ஆனால், சில நாட்களிலேயே எனக்கு செட் ஆகிவிட்டது.

அதனாலேயே நான் அங்கேயே நிறைய நிகழ்ச்சிகள் பண்ணுவது என்று செய்துகொண்டிருந்தேன்.மேலும், பெரிய ஜாம்பவான்கள் கூட நானும் இருந்தேன் என்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க எல்லோரும் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். ஐபிஎல், உலக கோப்பை ஸ்போர்ட்ஸ் உடன் தலைவி, RRR சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வந்தேன். இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.

-விளம்பரம்-

ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடிய நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்கினேன்.முதலமைச்சர் ஸ்டாலின், தோனி ரெண்டு பேரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே முடியாது. இது ஒரு பக்கம் இருக்க, எல்லோரும் நீங்கள் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இனி விஜய் டிவி பக்கம் போகவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஏன்னா, அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற ஆகிவிட்டது. மேலும், அவங்க இப்ப நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு போவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அதைவிட ஜெயா டிவியில் முதன் முதலாக எனக்கு வாய்ப்பு வெங்கட் ரமணி சார் தான் கலர்ஸ்-தமிழ் சோவுக்கு கூப்பிட்டார். நாம் எவ்வளவு உயரத்தில் போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன் என்று குறி இருந்தார்.

Advertisement