லியோ ஸ்டைலில் தோனி,CSK வெளியிட்ட வீடியோ – பாவனாவின் கமெண்டால் கழுவி ஊற்றும் விஜய் ரசிகர்கள்.

0
232
- Advertisement -

தல தோனியை புகழ்ந்து தளபதியை விமர்சித்து தொகுப்பாளனி பாவனா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடங்க இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 16 சீசங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி டைபெற இருக்கிறது. இந்த முதல் போட்டியே சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருக்கிறார்கள். மேலும், ஆரம்பத்திலேயே சென்னையில் நடைபெற இருப்பதால் ஐபிஎல் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தோனி ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஐபில் விளையாட்டு:

இதற்கு காரணம், தோனி கடைசியாக விளையாடும் ஐபிஎல் தொடர் இதுதான் என்று கூறப்படுகிறது. தோனி 40 வயதை கடந்தாலும் தன்னுடைய பிட்னஸ் விஷயத்தில் கவனமாக கண்டிப்பாக இருக்கிறார். இதனால் இவர் இன்னும் ஒரு சில ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் ஒரு சிலர் தரப்பினர் கூறுகிறார்கள். அதே சமயத்தில் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தோனி வீடியோ:

இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தோனி அவர்கள் சமீபத்தில் சென்னை வந்திருக்கிறார். அப்போது அவரை ரசிகர்கள் விமானத்தில் உற்சாகமாக வரவேற்று இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தோணிக்காக வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறது. அதில் சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ பட காட்சியை தோனிக்காக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

பாவனா கமெண்ட்:

அதில் தோனி உடைய பழைய புகைப்படத்தை எடுத்து கண்ணாடி எல்லாம் உடைத்து தோனிக்கு முடி வளர்ந்தது போல ஓவியம் வரைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே தோனியை வரவேற்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தொகுப்பாளினி பாவனா அவர்கள் இன்ஸ்டாவில், ஒரிஜினல் விட இந்த வீடியோ நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.

பாவனா குறித்த தகவல்:

இதைப் பார்த்த நெட்டிசன்கள், வாய் இருக்கிறது என்று பேசிவிடக்கூடாது. விஜய்க்கு என்ன குறைச்சல்? ஒரிஜினல் நன்றாக இல்லை என்று எப்படி பேசலாம்? என்றெல்லாம் அவரை திட்டி விமர்சித்து பேசி வருகிறார்கள். விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். கிரிக்கெட், படத்தின் விழா, நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement