தென் மாவட்ட பட சர்ச்சை – யுவனுடன் புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வாய்த்த Rk சுரேஷ்.

0
176
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார். அதன் பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் படங்களில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காடுவெட்டி. மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து விட்டது.

- Advertisement -

தென்மாவட்டம் படம்:

மேலும், இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் ஆர் கே சுரேஷ் நடிக்கும் படம் தென் மாவட்டம். இந்த படத்தை ஆர் கே சுரேஷ் எழுதி இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

யுவன் சங்கர் ராஜா பதிவு:

அந்த போஸ்டரில் இசை யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் பலருமே சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், தென் மாவட்டம் என்ற படத்தில் நான் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் அது தொடர்பாக என்னிடம் பேசவும் இல்லை. இதை நான் ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

ஆர் கே சுரேஷ் விளக்கம்:

இதைப் பார்த்த ஆர்கே சுரேஷ், வணக்கம் சார், படத்துக்கும் லைவ் இன் கான்சர்ட்டிற்கும் நீங்கள் கை எழுத்து போட்டு இருக்கிறீர்கள். ஒப்பந்தத்தை மீண்டும் வாசித்து பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பேசு பொருளான நிலையில் இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை, யுவன் தென் மாவட்டம் படத்துக்கு இசையமைப்பாரா என்ற குழப்பம் நிலவியது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு ஆர்.கே.சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம். தென் மாவட்டம் திரைப்படத்தில் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும், நன்றி” என தனது எக்ஸ் தளத்தில், யுவனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, பதிவிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

Advertisement