நடிகை பாவனாவின் நீண்ட நாள் காதலனுடன் திடீர் திருமணம் – விபரம் உள்ளே

0
2476

தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பாவனா. மேலும், பல மலையாலப் படங்களில் நடித்துள்ளார்.

இந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த கேஸ் தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.

இதன் பின்னர், மார்ச் 9ஆம் தேதி பாவனாவின் நீண்ட நாள் காதலன் நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிச்சியம் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் மிக சிம்பிளாக நடந்தது.

தற்போது வரும் 22ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதுவும், நிச்சசியம் போலவே மிக சிம்பிளாக நடக்கவுள்ளது என கூறப்படுகிறது.