அனிருத்துக்கு அப்படி தான் இருக்கும் என்று நம்புகிறேன். கிண்டல்களுக்கு பாவனா பதிலடி.

0
81741
bhavana-anirudh
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for bhavana balakrishnan

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.

இதையும் பாருங்க : கொரோனா பீதியில் கூட இரண்டாவது கணவருக்கு சாமர்த்தியமாக லிப் லாப் கொடுத்துள்ள நந்தினி சீரியல் நடிகை.

-விளம்பரம்-

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.

கடந்த சில காலமாக தமிழ் ரசிகர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக அசத்தி இருந்தார். இது ஒருபுறம் இருக்க பாவனா எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும், இவரை ஒரு சிலர் பெண் அனிருத் என்று கிண்டல் செய்திருப்பதும் உண்டு. இந்த நிலையில் இந்த கிண்டல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் பாவனா.

அதில், எனக்கும் அனிருத்துக்கும் ஒரே மாதிரி சாயல் இருக்கிறது என்று எனக்கும் தோன்றுகிறது. அதுகுறித்து கிண்டல் செய்பவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இங்கே எல்லோருக்குமே ஒரு அடையாளம் இருக்கிறது. மேலும், அது என்னை குத்தி காமிக்கும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. கேளி செய்யுங்கள் ஆனால் அதை மட்டுமே செய்யாதீர்கள் என்று கூறிய பாவனா அனிருத்தை போன்று லுக் வந்ததுபோல அவருடைய திறமையும் நமக்கு வந்திருக்கக் கூடாதா என்று நான் நினைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Image result for anirudh lady get up

இது போன்ற கிண்டல்களை அனிருத்தும் சந்தித்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் என்று சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வந்தது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்றும் கூறியிருந்தார் அதன் பின்னர்தான் தெரிந்தது அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் அம் மாடல் அழகியான ஷாநோ என்பவரின் புகைப்படம் என்று பின்னர் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement