உங்களை மாதிரி ஆட்களால் தான் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். நடிகையை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.

0
1200
Nidhi-Agarwal

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமில்லாமல் இதை வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் கேவலமான புத்தி உடைய ஜந்துகள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் பிரியங்கா கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மேலும், இந்த வழக்கில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளார்கள். இது குறித்து விசாரிக்கையில், பிரியங்கா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தான் செல்வார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கமாக பிரியங்கா வேலையை முடித்துவிட்டு தன் வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது சுங்கவாடி அருகே அவருடைய வாகனம் நின்றது. பின் அந்த கேவலமான எண்ணம் பிடித்தவர்கள் பிரியங்கா வண்டியை பஞ்சர் செய்து உள்ளார்கள். மேலும், அவர்கள் குளிர் பானத்தில் விஸ்கியை கலந்து உள்ளார்கள். அதோடு அவர்களும் மது அருந்தி இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து அந்த வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள் பிரியங்காவை கட்டாயப்படுத்தி குளிர் பானத்தை குடிக்க வைத்தார்கள். பின் பிரியங்காவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று அவளை வன்மையான முறையில் பாலியல் தொல்லைகளை செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள் அந்த கேவலமான நாய் ஜென்மங்கள்.

- Advertisement -

மேலும், பிரியங்காவை ஒரு பாலத்திற்கு அடியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார்கள். மேலும், பிரியங்காவின் சடலத்தை எரித்து விட்டுட்டு அந்த நால்வரும் தப்பிச் சென்றார்கள். மேலும், சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் தான் என்ற குற்றவாளிகள் என்று போலீசார் உறுதி செய்தார்கள். இப்படி இரண்டு நாட்களாக இந்திய நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கோரசம்பவம் நடத்திக் கொண்டிருக்கும் போது பிரபல பாலிவுட் நடிகை நீத்தி அகர்வால் சமூக வலைத்தளங்களில் ஒரு கிளாமர் போஸ் கொடுத்து ரிலாக்ஸ் என்ற கருத்தைப் பதிவிட்டு உள்ளார். இதனால், நெட்டிசன்கள் எல்லோரும் தாறுமாறாக பல விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும்,லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் “பூமி”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டில் முன்னணி நடிகை நித்தி அகர்வால் நடித்து உள்ளார். கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் பூமி. மேலும், நடிகை நித்தி அகர்வால் நடிகை மட்டுமல்லாமல் டான்சர்,மாடலும் ஆவார். முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக உள்ளார். மேலும்,பூமி படத்தை தொடர்ந்து நடிகை நித்தி அகர்வால் தெலுங்கில் இன்னொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பூமி படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை நித்தி அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிளாமர் போஸ் கொடுத்து ரிலாக்ஸ் என்று கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்திய நாடே கதிகலங்கி இருக்கும் போது இப்படி ஒரு போஸ் தேவையா??? என்றும், உங்கள மாதிரி ஆட்களால் தான் சாதாரணமான அப்பாவி பெண்கள் எல்லாம் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றும் ஆவேசமாக கூறியிருந்தார். மேலும், நீங்கள் இதை நிறுத்தினால் பல பிரச்சனைகள் குறையும் என்றும் கூறியிருந்தார். இதற்கு உடனே நடிகை நித்தி அகர்வால் அவர்கள் கூறியது, உங்களுடைய அட்ரஸ் அனுப்புங்கள் நான் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை அனுப்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். தற்போது இவர் பதிவிட்டு இருந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். நிதி அகர்வாலின் இந்த பதிவை கண்டு அந்த நபர் பதிவிட்ட ட்வீட்டையே டெலீட் செய்துவிட்டார்.

Advertisement