தங்கள் மகள் வயதுடைய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் நடிகர்கள் – பூமிகா ஓபன் டால்க்

0
537
Bhumika
- Advertisement -

நடிகர்கள் தங்கள் குழந்தை வயது உடைய பெண்களுடன் ரொமான்ஸ் செய்வது சரியா? என்று நடிகை பூமிகா வெளுத்து வாங்கி இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமிகா. இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2000ம் ஆண்டில் வெளிவந்த யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘பத்ரி’ என்ற படத்தில் பூமிகா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் இவர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் என்று சில படங்களில் நடித்திருந்தாலும் என்றென்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பூமிகா திரைப்பயணம்:

பின் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பிற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேலும், இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடித்திருந்தார். இதனிடையே பூமிகா தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.

பூமிகா ரீ என்ட்ரி:

பின் மீண்டும் இவர் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து இருக்கிறார் . தற்போது இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். தற்போது அஜித்தின் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பூமிகா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சல்மான்கான் நடித்திருக்கிறார். மேலும், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஹீரோ ஹீரோயின்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் குறித்து நடிகை பூமிகா பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

பூமிகா அளித்த பேட்டி:

அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பூமிகா, படங்களில் தங்களை விட வயது குறைந்த ஹீரோயின்களுடன் நடிகர்கள் ரொமான்ஸ் செய்யும்போது நடிகைகளும் அதை செய்யலாம். இதை படம் எடுப்பவர்களுக்கும் சரி பார்ப்பவர்களுக்கும் சரி ஏற்றுக்கொள்ள வேண்டும். கமர்சியல் படங்களில் பெரும்பாலும் மூத்த நடிகைகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த வயது வித்தியாசம் வெப்சீரிஸ்களில் மாறி வந்தாலும் கமர்சியல் படங்களில் இன்னும் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே தான் இருக்கிறார்கள். ஆனால், நடிகைகள் தான் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஹீரோயின்கள் நிலை குறித்து சொன்னது:

இந்த காலத்திலும் இப்படி நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்பதெல்லாம் நிஜ வாழ்க்கையில் கூட வயது குறைந்த ஆணை பெண் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. அது அவர்களுடைய வாழ்க்கை. ஒரு ஆணால் வயது குறைந்த பெண்ணுடன் வாழ முடியுமானால் பெண்ணாலும் அது முடியும். அது போல தான் தன்னுடைய பாதி வயதை உடைய நடிகையுடன் ஒருவரால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்றால் அது நடிகைக்கும் பொருந்தும். என் மகன் வயதை உடைய நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடிக்க என்னால் முடியும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement