யாஷின் அடுத்த படம், வீடியோவுடன் வெளியான அறிவிப்பு – அட, இயக்குனர் இந்த சத்யராஜ் பட குழந்தை நட்சத்திரம் தானா.

0
185
- Advertisement -

கே ஜி எஃப் நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை கே ஜி எப் திரைப்படம் செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் ரவி கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

கேஜிஎப் படம் குறித்த தகவல்:

மேலும், இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் இருந்த படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

யாஷ் நடிக்கும் புது படம்:

மேலும், யாஸ் நடிக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் யாஸ் நடிக்கும் 19 ஆவது படம் குறித்த தகவல்தான் வெளியாகி இருக்கிறது. இவருடைய படத்தை கீது மோகன் தாஸ் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கே.வி என் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் இயக்குனர்:

இந்த படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்திருக்கிறது.
மேலும், இந்த படத்தை இயக்கும் இயக்குனர் கீது மோகன்தாஸ் அவர்கள் ஏற்கனவே லையர்ஸ் டைஸ் லயர் மற்றும் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த மூத்தோன் போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து பலரும் அறியாத தகவல்தான் வெளியாகி இருக்கிறது.

கீது மோகன்தாஸ் குறித்த தகவல்:

மலையாள உலகில் பிரபலமான இயக்குனர்களில் கீது மோகன் தாஸ் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் காயத்ரி மோகன்தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே தமிழில் வெளிவந்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் மாதவன் நடிப்பில் வெளிவந்த நளதமயந்தி என்ற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் நிறைய படங்களில் நடித்தும் இருக்கிறார். அதற்காக இவர் விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி இருக்கிறார்.

Advertisement