நீண்ட வருடங்களுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி ஆகும் பூமிகா.! யாருடைய படத்தில் தெரியுமா.!

0
1329
Bhumika
- Advertisement -

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் ‘யுவகுடு’ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for Bhumika

விஜயின் பத்ரி படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம்,ஜில்லுன்னு ஒரு காதல் என்ற இரு பிரபலமான படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.  தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார். 2007 ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்திகொண்டனர்.

- Advertisement -

ஆனால் திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தப்பட்டார்.

Image result for Bhumika

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா. இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குநர் மு.மாறனின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.ஏற்கனவே படபிடிப்பில் கலந்துக் கொண்டு தன்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங்கை 10 நாட்கள் முடித்து விட்டாராம். ’கண்ணை நம்பாதே’ படக் குழுவினரும் 50 சதவீத படபிடிப்பை நிறைவு செய்து விட்டார்களாம்.

Advertisement