பட்டபகலில் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய சக்தி.! பாவம் அவர ட்ரிகர் பன்னிட்டாங்க போல.!

0
922
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த காயத்ரி கடந்த மாதம் குடி போதையில் கார் ஒட்டி சென்று போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் பிக் பாஸ் சக்தியும் குடி போதையில் கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

பிரபல இயக்குனர் பி வாசுவின் மகனும் நடிகருமான சக்தி
சின்னதம்பி’ என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ‘தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பிரபல தனியார், ‘டிவி’ நடத்திய, ‘பிக் பாஸ்’ என்ற, நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

நேற்று காலை, சென்னை, சூளைமேட்டில் உள்ள, நண்பரின் வீட்டிற்கு, தன், ‘எக்கோ ஸ்போர்ட்’ காரில் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், மதியம், 2:00 மணிக்கு, சூளைமேடு இளங்கோவடிகள் தெரு வழியாக, வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அப்போது, அந்த தெருவில், ‘சிப்ஸ்’ கடை நடத்தி வரும், செல்வம், 41 என்பவரின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். காரை நிறுத்தாமல் வேகமாக சென்ற அவரை, இளங்கோவடிகள் தெருவில் இருந்தோர் மடக்கிப் பிடித்து, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின், அண்ணா நகர் போக்குவரத்து போலீசாரிடம், சக்தி ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், அவர் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, சக்தியை கைது செய்து, இரவு, 8:30 வரை, போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.சமீபத்தில், சக்தியுடன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற, நடிகை காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி சிக்கினார். அதேபோல, நடிகர்கள் அருண் விஜய், ஜெய் போன்றோரும், குடிபோதையில் கார் ஓட்டி, போலீசாரிடம் சிக்கினர் எனபது குறிப்பிட்டதக்கது.

-விளம்பரம்-
Advertisement