இந்த சீஸனின் முதன் நாமினேஷன் – இளம் பெண் போட்டியாளரின் ஆடையை காரணமாக சொல்லி நாமினேட் செய்த விசித்ரா. எழுந்த சர்ச்சை

0
957
Vichithra
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது . தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். நேற்று வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இன்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் முதல் நாளில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் விவாதம் தொடங்கிவிட்டது.

முதல் நாள் நிகழ்ச்சி:

அந்த வகையில் காலையில் ஜோவிதாவிற்கு சீனியர் நடிகர்கள் பலருமே படிப்பை பற்றி அறிவுரை செய்திருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜோவிதா அமைதியாக இருந்தார் அதற்குப்பின் விஜய் வர்மா லியோ பாடல் பேட் தாஸ் குறித்து பேசி இருக்கும்போது பிரதீப் ஆண்டனி எனக்கு கெட்ட வார்த்தை சரளமாக வரும். நீங்கள் யாராவது தொடங்கி விட்டால் நான் எக்கச்சக்கமாக பேசுவேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

முதல் வாரத்திற்கான நாமினேஷன்:

இப்படி முதல் நாளே நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முதல் வாரத்திற்கான நாமினேஷனை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதனால் போட்டியாளர்களும் இரண்டு பேரை காரணத்துடன் கூறியிருந்தார்கள். அந்த வகையில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

விசித்திரா குறித்த சர்ச்சை:

இப்படி பலரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி போட்டியாளர்களை நாமினேட் செய்திருந்தாலும் விசித்திரா சொன்ன காரணம்தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, அவர் போட்டியாளர் ஐசுவின் ஆடைகள் ரொம்ப கிளாமராகவும், வல்கராகவும் இருக்கிறது. என்னதான் யூத்தாக இருந்தாலும் இப்படியெல்லாம் ஆடை அணிவதா? சரியான உடை அணிவது ரொம்ப முக்கியம் என்றெல்லாம் பேசி இருந்தார். தற்போது இவர் பேசியிருப்பதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement