யாரும் எதிர்பாராத Mid Week Eviction – வெளியில் போவது இவர் தான்

0
237
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மிட் வீக் எவிக்ஷன் குறித்த ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கிறது. மேலும், கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது.

- Advertisement -

டான்ஸ் மாரத்தான் டாஸ்க்:

மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் கெட்டப்:

அதோடு இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அளவிற்கு செய்துவிட்டார்கள். இதனால் வீட்டிலேயே கலவரம் இடித்தது. பின் நேற்று நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கெட்டப் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். தினேஷ்- படையப்பா ரஜினி , விசித்ரா- நீலாம்பரி, அர்ச்சனா- திமிரு பட வில்லி, பூர்ணிமா- பருத்திவீரன் முத்தழகு, விஷ்ணு- போக்கிரி விஜய், மாயா- ஜீன்ஸ் வைஷ்ணவி.

-விளம்பரம்-

மூன்றாவது ப்ரோமோ:

இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருக்கிறார்கள். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் பிக் எவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் நாமினேட் ஆனவர்கள் தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன்.

மிட் வீக் பிக் எவிக்ஷன்:

இதில் யாருடைய புகைப்படம் நிறைவடையாமல் இருக்கிறதோ அந்த நபர் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விட்டு வெளியேற இருப்பார் என்று பிக் பாஸ் அறிவித்தார். இந்தநிலையில் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறுகிறார். ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அனன்யா முதல் எவிக்ஷனில் வெளியில் இருந்தார். பின் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார். தற்போது மீண்டும் நிகழ்ச்சியை விட்டு அனன்யா வெளியேறி இருக்கிறார். இவருக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் நிகழ்ச்சியில் பெரிதாக எந்த ஒரு சுவாரசியத்தையும் காட்ட வில்லை. இதனால் தான் இவர் வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement