-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் – யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க

0
294

பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் நான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளக்குவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து சமீபத்தில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் தேதி குறித்த புது பிரமோ வெளியாகி இருந்தது.

பிக் பாஸ் 8 ஆரம்பம்:

அதில், வருகிற அக்டோபர் முதல் வாரம், அதாவது 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் 8 ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக சேனல் தரப்பிலிருந்து வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் பிக் பாஸ் 8 நிகழிச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் முடிந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து இறுதி பட்டியல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்:

-விளம்பரம்-

வெளியான தகவலின்படி பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் லிஸ்ட் இதுதான்.

-விளம்பரம்-
  1. குரேஷி (விஜய் டிவி காமெடியன்)
  2. அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்)
  3. ஷாலின் ஜோயா ( குக் வித் கோமாளி பிரபலம்)
  4. ரியாஸ் கான் (நடிகர்)
  5. பூனம் பஜ்வா (நடிகை)
  6. ஜெகன் (காமெடி நடிகர்)
  7. ரஞ்சித் (பிரபல நடிகர்)
  8. அமலா ஷாஜி (சோசியல் மீடியா பிரபலம்)
  9. சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேரா பாடல் புகழ் நடிகை)
  10. ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் பட நடிகை)
  11. டிடிஎஃப் வாசன் (youtube சர்ச்சை பிரபலம்)
  12. ஆர் ஜே ஆனந்தி
  13. வில்லியம் பேட்ரிக் (சோசியல் மீடியா பிரபலம்)
  14. சுனிதா (விஜய் டிவி பிரபலம்)
  15. VTV கணேஷ்(திரைப்பட காமெடி நடிகர்)
  16. மா கா பா ஆனந்த் (விஜய் டிவி தொகுப்பாளர்)
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news