பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது . தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து தான். விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று இரண்டாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 8:
கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி ஏற்று கொண்டார்கள். ஆனால், ஜாக்லினுக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் பின் முதல் வாரத்திற்கான கேப்டனசி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ:
அதோடு இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள்vs பெண்கள் டாஸ்க் நடக்கிறது. அதில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் போக வேண்டும். இதில் ஜாக்லின்-சுனிதா இடையே சண்டை நடக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், ஆண்கள் அணிக்கு என்னை தானே போகலாம் என்று சொல்லி இருந்தீர்கள். இப்போ நான் போகக்கூடாது என்று தானே ஓட்டு கேட்கிறீர்கள் என்று பவித்ரா கேட்கிறார்.
ஜாக்லின்-பவித்ரா சண்டை:
அதற்கு ஜாக்குலின், இவள் போனால் பாவம் பார்ப்பார்கள் என்று நீங்கதானே சொன்னீர்கள் என்றவுடன் கோபமாக பவித்ரா, எனக்கு யாரும் பாவம் பார்க்கத் தேவையில்லை என்கிறார். அதற்கு ஜாக்லின், பாவமோ, பாவம் இல்லையோ நீங்கள் அங்கு போகக்கூடாது என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் பவித்ரா, என்னை பாவம் பார்த்து அனுப்ப தேவையில்லை என்று கோபத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார்.