பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் முடிந்து 22 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இரண்டு அணியும் மாறி மாறி விளையாடி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
அதற்கு பின் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும், மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்து விளையாடி இருந்தார்கள். மேலும், இந்த வாரமும் நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க் நடந்தது. அதில் முதல் டாஸ்கில் ஆண்கள் வென்றார்கள். இரண்டாம் டாஸ்கில் பெண்கள் அணி வென்றார்கள். கடைசியில் மூன்றாம் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். கடந்த வாரமும் இந்த நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பெண்கள் அணி தான் வென்று ஜாக்லின் காப்பாற்றப்பட்டார்.
நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க்:
இந்த வாரம் பெண்கள் அணி முடிவு எடுத்து பவித்ரா காப்பாற்றப்பட்டு இருப்பதால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டு இருந்தார். சனி கிழமை எபிசோட்டில், கில்லர் காயின் டாஸ்கில் ஆண்கள் நடந்து கொண்ட விதம் தவறு என்று கண்டித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். பின் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருந்ததற்கு பாராட்டையும் தெரிவித்திருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க்கில் யார் தங்களுடைய கதாபாத்திரத்தை மீறி வெளிவந்தது என்று கேட்டதற்கு யாருமே பதில் சொல்லவில்லை. உடனே விஜய் சேதுபதி, ஒவ்வொரு பெயரை சொல்ல வேறு வழிஇல்லாமல் மாட்டி கொண்டார்கள். பின் நேற்று நடந்த எவிக்ஷனில் தர்ஷா வெளியேறி இருந்தார். வெளிவந்த பிறகு தர்ஷா பெண் போட்டியாளர்களுக்குள் இருக்கும் குழுவை திட்டி பேச, விஜய் சேதுபதி கண்டித்து இருந்தார்.
பிக் பாஸ் ப்ரோமோ:
மேலும், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், இந்த நான்காம் வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் ஜெப்ரி, ஜாக்லின்,ரஞ்சித், சத்யா, பவித்ரா, தீபக், அன்ஷிதா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நீங்க எல்லாம் குரூப்பா சேர்ந்து கொள்கிறீர்கள் என்று சாச்சனா சொல்கிறார். இதனால் சுனிதா வாக்குவாதம் செய்கிறார். பின் இருவருக்கும் சண்டை நடக்கிறது. கடைசியில் சுனிதா, நீ என்னை அக்கா என்று கூப்பிடாதே சொல்கிறார்.