விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 17 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்.

மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். பின் இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் அர்னவ் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி, பெண்கள் அணியில் இருந்து சாச்சனா இடம் மாறி இருந்தார்கள். பின் மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷனில் தர்ஷா, அருண், ஜாக்லின், அன்ஷிதா,பவித்ரா ஜனனி, சத்யா,முத்துக்குமரன்,சௌந்தர்யா ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்த வாரம் மீண்டும் கேப்டனாக தர்ஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். நேற்று எபிசோட்டில் சாச்சனாசுவுக்கு வயிறு வலி என்பதால் கன்பெக்சன் ரூமுக்கு அருண் அழைத்து சென்றார்.

நேற்று எபிசோட்:
இதனால் அருண் விதியை மீறி சென்றதால் பாய்ஸ் போட்ட கண்டிஷனை கேன்சல் செய்து விடலாம் என்றெல்லாம் பெண்கள் அணி பேசியிருந்தார்கள். ஆனால், இது ரொம்ப மோசமான எண்ணம். உதவி செய்ய தான் அருண் சென்று இருந்தார். அதுவும் தர்ஷிகாவிடம் அனுமதி கேட்டார். அதற்குப் பின் ஸ்டார் ஹோட்டல் என்ற வீக்லி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். ஹோட்டல் நிர்வாகத்தை முதலில் பெண்கள் அணியிடம் கொடுக்கப்பட்டது. முதலில் மேனேஜராக பவித்ரா இருந்தார்.

பெண்கள் அணி செய்த வேலை:
பெண்களுமே ஹோட்டல் வேலையை சிறப்பாக கவனித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் செய்ததில் சில குறைகளை சொல்லி மேனேஜரை ஆண்களை மாற்ற வைத்தனர். அதற்குப்பின் சுனிதா மேனேஜர் ஆனார். இப்படி சுவாரசியமாக நேற்று எபிசோட் சென்றது. இப்படி இருக்கும் நிலையில் லவ் ட்ராக் குறித்து பெண்கள் அணிக்குள் பேசியிருக்கும் விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாக்லின்- ஆனந்தி இருவருமே மற்ற பெண்களிடம் ஆண்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
View this post on InstagramA post shared by Bigg boss season 8 tamil (@biggbosstamil.08)
நெட்டிசன்கள் விமர்சனம்:
அப்போது ஜாக்லின், விஷாலுக்கும் உனக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு தானே? என்று அவரிடம் கேட்க, தர்ஷா இல்லை என்று சொன்னார். உடனே தர்ஷிகா, நீயும் பேச்சாளர். முத்துவும் பேச்சாளர். உங்களுக்கு தான் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல, நாங்கள் பேசியே தீர்த்து விடுகிறோம். எங்களுக்கு தேவை இல்லை என்று பேசுகிறார். பின் பெண்கள் எல்லோருமே ஆண்களுடைய வயதை கணக்கு போட்டு பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் பேசிய வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பெண்கள் அணியை கழுவி ஊட்டுகிறார்கள். இதெல்லாம் ஒரு பொழப்பா, பெண்கள் அணியின் செயல் ரொம்ப மோசமாக இருக்கிறது. என்ன ஒரு புத்தி என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.






