பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஒன்பதாம் வாரம் நாமினேட் ஆகி இருக்கும் நபர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 57 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன் பின் எட்டாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியலில் ஜாக்லின், ரஞ்சித், சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி,விஷால், சத்யா இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இதனால் பிக் பாஸ் வீடே கலவர பூமியாக இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பொம்மையை தேர்வு செய்து அதை டால் ஹவுசில் வைக்க வேண்டும்.
பொம்மை டாஸ்க்:
அதோடு அவர்கள் தங்களுடைய பொம்மைகளை தேர்வு செய்யவே கூடாது. அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு விருப்பமில்லாத பொம்மையை டால் ஹவுசில் சேர்க்க விடாமலும் தடுக்கலாம். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே வெறி கொண்டு விளையாடுகிறார்கள். நேற்று எபிசோட்டில் ராணவ விதியை மீறிவிட்டார் என்று பிக் பாஸ் வீட்டில் போர்க்களமே நடந்தது. ராயன், ஆத்திரத்தில் ராணவை அடிக்கப் போனார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
உடனே பிக் பாஸ் வீட்டில் இருந்தர்வர்கள் அவர்களை தடுத்தார்கள். அதற்கு பிறகு ராணவ்-ஜாக்லின் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த சௌந்தர்யா, ராணவ் இடம் சண்டைக்கு போனார். இப்படி கலவரத்தில் டாஸ்க் முடிந்தது. இந்த டால் டாஸ்க்கில் ஜெஃப்ரி தான் வின்னர் ஆனார். இந்த வாரத்தினுடைய பெஸ்ட் பிளேயர் ஆக ஜெஃப்ரி, சாச்சனா தேர்வாகி இருக்கிறார்கள். பின் இந்த வாரம் ஒர்ஸ்ட் பிளேயர் ஆ ராணவ்- மந்திரி தேர்வாகி இருக்கிறார்கள்.
நாமினேஷன் பட்டியல்:
பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார். இந்நிலையில் ஒன்பதாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் மஞ்சரி, முத்துக்குமார், சாச்சனா, ராணவ், ரஞ்சித், தர்ஷிகா, சௌந்தர்யா, ராயன், பவித்ரா, சத்யா, ஜாக்லின், ஆனந்தி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.