பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நாமினேஷன் பிரீ பாஸ் டாஸ்கில் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக பிக் மூன்றாவது வாரம் முடிந்து 26 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கில் முத்து வென்றார். அதற்கு பின் நாமினேஷனில் நேரடியாக அன்ஷிதா, தீபக் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு பின் ஜெப்ரி, ஜாக்லின்,ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் ஆள் மாறாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் மற்றவரை போல மாறி நடித்து காட்ட வேண்டும். ஒருவரை போல் மாறி அவர்கள் செய்யும் விதத்தையும், அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயத்தையும் செய்து காட்ட வேண்டும் என்று பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.
இந்த வாரம் டாஸ்க்:
இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே சிறப்பாக செய்திருந்தார்கள். இதில் சில மன கசப்புகளும், பிரச்சனைகளும் வந்திருந்தது. நேற்று தீபாவளி கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக இருந்தது.
போட்டியாளர்களுக்கும் சின்ன சின்ன டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நாமினேஷன் பிரீ பாஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நான்காவது வாரமும் நாமினேஷன் பிரீ பாஸை பெண்கள் அணி தான் வென்றார்கள்.
Makkala face panaatha aaluku epdi Nomination Free Pass Kuduka Decide panringa 😑
— Dᴀᴠɪᴅ Aᴅᴀᴍ CVF (@David_AdamCVF) November 1, 2024
Athuvum 3 week apram ipo thaan nomination laye vanthurukaa🙄#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BiggBossTamil
pic.twitter.com/U1ExSC39LT
நாமினேஷன் பிரீ பாஸ் டாஸ்க்:
ஜாக்லின், அன்ஷிதா, பவித்ரா, சுனிதா ஆகியோர் தான் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் இருந்து ஒருவரை தான் காப்பாற்ற வேண்டும். இதனால் பெண்கள் அணியில் இந்த முறை ஓட்டிங் சிஸ்டம் நடந்தது. இதில் எல்லோருக்குமே இரண்டு ஓட்டு கிடைத்திருக்கிறது. ஆனால், சுனிதாவிற்கு மட்டும் மூன்று ஓட்டு கிடைத்தது. இதனால் சுனிதா தான் இந்த வாரம் காப்பாற்றப்பட்டார் என்று அறிவித்திருந்தார்கள்.
According to #Soundariya, the Nomination Free Pass should’ve gone to someone more deserving this week than #Sunitha..! 🎟️👀#BiggBoss8Tamil #BiggBossSeason8Tamil #BiggBossTamil #BiggBossTamil8 #BBTamil8https://t.co/uAEBpLnxB8
— Rasigan 🧊🔥 (@Rasigan_022) November 1, 2024
நெட்டிசன்கள் ட்ரோல்:
இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், இந்த தீர்ப்பு நியாயம் இல்லை. சுனிதா இந்த வாரம் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருக்கிறார். அதனால் அவர் வெளியே போக வாய்ப்பு அதிகம் இல்லை. இவருக்கு பதில் வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஒரு நாமினேஷன் பிரீ பாஸ்ஸை வேஸ்ட் செய்து விட்டீர்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.