விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி 19 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார்.
பிக் பாஸ் 8:
பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் சென்று கொண்டு இருக்கிறது. இதில் ஆண்கள் அணி கஸ்டமராகவும், பெண்கள் அணி நிர்வாகம் செய்து இருந்தார்கள். பின் ஆண்கள் அணி நிர்வாகமும், பெண்கள் அணி கஸ்டமராகவும் இருந்தார்கள். நேற்று எபிசோடில் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்ய சொல்லி பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

நேற்று எபிசோட்:
இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடி இருந்தார்கள். பின் நிர்வாகம் செய்தவர்கள் தங்களுடைய கருத்துக்களையும், குறைகளையும் சொல்லணும், கஸ்டமர்கள் தங்களுடைய கருத்துக்களையும் குறைகளையும் சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களுடைய குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்துக்குமரன், ஆனந்தி செய்த தவறை சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க்:
மேலும், இந்த வாரமும் நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க் நடந்தது. அதில் முதல் டாஸ்கில் ஆண்கள் வென்றார்கள். இரண்டாம் டாஸ்கில் பெண்கள் அணி வென்றார்கள். கடைசியில் மூன்றாம் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். கடந்த வாரமும் இந்த நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பெண்கள் அணி தான் வென்று இருந்தார்கள். அதில் மற்ற பெண்கள் எல்லாம் சேர்ந்து ஜாக்லினை காப்பாற்றினர். அதனால் இந்த வாரம் ஜாக்லினே தனக்கு இந்த வாரமும் நாமினேஷன் ப்ரீ பாஸை தனக்கு வாங்கினால் நன்றாக இருக்காது, அதனால் வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

காப்பாற்றப்பட்ட போட்டியாளர்:
இதனால் ஆனந்தி, சாச்சனா, சுனிதா, தர்ஷிதா ஆகிய நான்கு பேருமே தர்ஷாவை காப்பற்றலாம் என்று கூறவில்லை. அனைவரும் சௌந்தர்யா, பவித்ரா, அன்சிதா ஆகியோரின் பெயரை தான் கூறினார்கள். இறுதியில் அனைவரும் சேர்ந்து காப்பற்ற முடிவை எடுத்து பிக் பாஸிடம் அறிவித்துவிட்டனர். இறுதியில் தற்போதைய நிலவரப்படி ஓட்டிங்கில் கடைசி நான்கு இடத்தில் அன்ஷிதா, ஜாக்லின், தர்ஷா, பவித்ரா ஆகியோர் தான் இருக்கின்றனர். இதில் தற்போது பவித்ரா காப்பாற்றப்பட்டு இருப்பதால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.






