பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 12ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 8:
மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து குவிஸ் டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு டம்ளரை அடுக்க பந்தால் தடுக்க வேண்டும். ஆண்கள் அணி சிறப்பாக விளையாடி இருந்தார்கள். இன்னும் ஒரு டாஸ்க் இருக்கிறது. முடிவு நாளை சொல்லப்படும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், இன்று ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே டாஸ்க். கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை அதே ஆர்டரில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.

பிக் பாஸ் டாஸ்க்:
ஒவ்வொரு அணியில் இருந்தும் மூன்று பேர் போக வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது. அதன் படி ஆண்கள் vs பெண்கள் அணியில் இருந்து மூன்று பேர் விளையாடி இருந்தார்கள். அதில் ஆண்கள் அணியில்,
தர்ஷா - 5,அர்னவ் - 4 ,முத்து - 15,மொத்த மதிப்பெண் 24 புள்ளிகள் பெற்றார்கள். பெண்கள் அணியில்- தர்ஷிகா - 10,பவித்ரா - 8,ஆனந்தி - 7, 25 புள்ளிகள் பெற்று இந்த டாஸ்க்கை பெண்கள் அணி வென்றார்கள். பின் பெண்கள் அணியில் ஒரு நபரை நாமினேஷனில் இருந்து காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறது.

நாமினேஷன் அப்டேட்:
அந்த வகையில் பெண்கள் அணியில் ஜாக்குலின், சாச்சனா, சௌந்தர்யா தர்சா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் நாமினேஷனில் தப்பிக்க தங்களுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுகிறார்கள். இதனால் மற்ற பெண்கள் கூடி சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். கடைசியில் பெண்கள் எடுத்த முடிவில் நாமினேஷனில் இருந்து ஜாக்லின் காப்பாற்றப்பட்டார்.






