பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் ஏழாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஆறு வாரம் முடிந்து 43 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார். பின் கடந்து வந்த பாதை டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், கடந்த ஆறாவது வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்கில் அருண் பிரசாத் வென்று தலைவராகி இருந்தார். இந்த வாரம் பள்ளி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மாறி கலாட்டா, கலவரங்கள் செய்திருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் தீபக், சௌந்தர்யா, சிவக்குமார், ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, சத்யா, ரியா, சாச்சனா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருந்தார்கள்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்:
இதில் குறைவான வாக்குகளை பெற்று நேற்று ரியா தியாகராஜன் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரொம்ப எமோஷனலாக கண்ணீர் விட்டு அழுது பேசியிருந்தார். உடனே விஜய் சேதுபதியும் அவருக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பியிருந்தார். மேலும், இந்த ஏழாவது வாரத்தின் தலைவராக மஞ்சரி தேர்வாகி இருக்கிறார்.
This week nominations.
— Behind Talkies (@BehindTalkies) November 17, 2024
#Manjari is the captain of the house.#Muthu (DN)
Arun#Raanav
Shiva #Vishal
Rayan
varshini (DN)
soundrya
Anandhi
Pavithra
Jacqueline
Tharshitha
Sachana#BiggBossTamil8 #BiggBossTamilSeason8
நாமினேட் பட்டியல்:
இந்நிலையில் இன்று ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் முத்து, வர்ஷினி நேரடியாக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் அருண், ராணவ், சிவா, விஷால், ராயன், சௌந்தர்யா ஆகியோரும் நாமினேட் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.