பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் நான்காவது நாளுக்கான முதல் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று மூன்றாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
அதன் பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 8:
அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித், அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். நேற்று ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
நேற்றைய எபிசோட்டில், விஷால் வழக்கம் போல் எல்லோரையும் கூப்பிடுவது மாதிரி வாடி போடி பவித்ராவை என்று கூப்பிட்டிருக்கிறார். அதனால பவித்ரா அப்படி கூப்பிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலுமே விஷால் அப்படியே கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் கோபப்பட்ட பவித்ரா சண்டைக்கு போனார். அதற்குப்பின் டாஸ்கில் பெண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கு என்று பெண்கள் அணி, ஆண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று ஆண் தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

நேற்று எபிசோட்:
இதற்கிடையில் பவித்ரா விஷயத்தில், ரவீந்தர்- ரஞ்சித் பயங்கரமாக சண்டை போடிருந்தார்கள். ஆனால், கடைசியில் அதை பிராங்க் என்று முடித்ததால் பெண்கள் அணியினர் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள். இதனால் பவித்ரா புலம்பி அழுது இருந்தார். அதேபோல் முத்துக்குமரன்- ஜாக்லின் இடையே வாக்குவாதம் நடந்தது. மேலும், முதல் ப்ரோமோவில், நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் இந்த வாரம் வெளியே போவார்கள் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார்.
https://youtu.be/GP-GTavbkSE?si=vbr4abe37Ox6vu0X
இரண்டாவது ப்ரோமோ:
அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுமே நாமினேட் ஆனவர்களுடைய பெயர் சொல்லி இருந்தார்கள். அதில் அதிகம் ரஞ்சித்- சௌந்தர்யா- ரவீந்தர் பெயர் வந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் சௌந்தர்யா, இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்று சொல்லும்போது எல்லோருமே எனக்கு பல காரணங்களை சொன்னார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்லும்போது மற்ற போட்டியாளர்கள், அதை நீ அங்கே சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார்கள். என்னால் நீங்கள் பேசும் தெளிவாக சொல்ல முடியவில்லை என்று சௌந்தர்யா சொல்ல, உனக்கு பேச தெரியாதா என்று சுனிதா கேட்கிறார்.






