பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணுக்கு சௌந்தர்யா ப்ரொபோஸ் செய்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 82 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார்.

பிரீஸ் டாஸ்க்:
இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த 12 வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, ஜெப்ரி, ஜாக்லின், மஞ்ஜரி, ராணவ், விஷால், பவித்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள். முதலில் தீபக்கின் மனைவியும் அவருடைய மகன் வந்திருந்தார்கள். இவரை அடுத்து மஞ்சரியின் மகன் மற்றும் அவருடைய அம்மா, தங்கை வந்திருந்தார்கள்.

சௌந்தர்யா ப்ரோபோஸ்:
இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து போட்டியாளர்களுடைய பெற்றோர்கள் வந்திருந்தார்கள். இந்த வாரமே ரொம்ப எமோஷனலாக இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், நடிகரும் முன்னாள் போட்டியாளருமான விஷ்ணு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரை பார்த்தவுடன் சௌந்தர்யா, marry me? என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிய விஷ்ணு சிரித்துக் கொண்டே வெக்கப்பட்டார்.
பின் அவர் சௌந்தர்யாவின் கையை பிடித்து, என்னைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
View this post on InstagramA post shared by Biggboss_updates_tamil (@biggboss8_tamil_updates_)
விஷ்ணு சொன்ன பதில்:
அப்போது எனக்கு சௌந்தர்யா தான் சப்போர்ட்டாக இருந்தார். இப்பதான் உங்க அப்பா, அம்மா வந்துட்டு போயிருக்காங்க. என்ன சொல்வது என்று புரியவில்லை என்று சொன்னவுடன், அதை பார்த்துக் கொள்ளலாம் உன்னுடைய முடிவு சொல் என்கிறார் சௌந்தர்யா. உடனே விஷ்ணு, எனக்கு ஓகே தான் பிடித்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் வெளியில் பார்த்து கொள்ளலாம். இன்னும் இருக்கும் நாட்களில் கவனம் செலுத்து. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். கவனம் சிதற வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.






