பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 10வது வாரத்தில் வெளியேறியிருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் முடிந்து 64 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். அந்த வகையில் கடந்த வாரம் ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் வெடித்தது.
ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்:
டெவீல் அணியில் இருப்பவர்கள் ஏஞ்சல் அணியில் இருப்பவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க். ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபமானாலோ, அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட்டை கழட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் டாஸ்க்கின் விதி. அதோடு இந்த டாஸ்கில் அதிகமான ஹார்ட் யார் வாங்குகிறார்களோ அவர் தான் நாமினேசன் ப்ரீ பாஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் என்று கூறப்பட்டது.
டாஸ்க் குறித்த தகவல்:
இதனால் சிலர் கொஞ்சம் எல்லையை மீறி முட்டையை வாயில் ஊத்துவது, தலையில் உடைப்பது, முகத்தில் திணிப்பது, குப்பையை கொட்டுவது என்று மட்டமான வேலை எல்லாம் செய்திருக்கிறார்கள். இந்த டாஸ்கில் ரஞ்சித், பவித்ரா, தீபக், மஞ்சரி ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகி இருந்தார்கள். நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
This week nomination list💥💥#Tharshika #Soundariya#Jacquline#Rayan#Pavithra #Anshida #Vishal#Arun #Sathya#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8
— Behind Talkies (@BehindTalkies) December 8, 2024
நாமினேட் பட்டியல்:
இந்நிலையில் தற்போது பத்தாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், தர்ஷிகா, சௌந்தர்யா, ஜாக்குலின், ராயன், பவித்ரா, அன்சிதா, விஷால், அருண் சத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.