நடந்த காரணத்தை விசாரித்தால் உங்கள் மீது தான் தவறு- ஜாக்லினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

0
197
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 14ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக வாக்குகளை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டுக்குள் வந்து இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். அதற்குப் பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். இந்த வாரம் பிக் பாஸ் டாஸ்க் கொடுத்த டாஸ்கில் யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும்.

நேற்று எபிசோட்:

எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். கடைசியில் பெண்கள் அணி வென்று ஜாக்லினை காப்பாற்றினார்கள். பின் பிபி அவார்டு நிகழ்வினால் ஒவ்வொரு ஆண்கள் அணியினர் பெண்களுக்கும், பெண்கள் அணியில் இருந்து ஆண்களுக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டது. இந்த விருது விழாவில் அர்னவ் கொடுத்த சொம்பு தூக்கி விருதால் அன்ஷிதா ரொம்பவே மனமுடைந்து கதறி அழுதார்.

-விளம்பரம்-

முதல் ப்ரோமோ:

பின் நேற்று எபிசோடில் வழக்கம் போல் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வைத்து செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், காலையிலிருந்து ஜாக்லின் ஜாக்லின் என்று என் பெயரை சொல்லிட்டு அதற்குப் பிறகு என்னை டார்கெட் செய்தார்கள் என்று ஜாக்லின் சொல்ல, காரணம் இல்லாமல் உங்களை குறை சொல்லவில்லை. உங்கள் மீது தான் தவறு என்று வெளுத்து வாங்கினார் விஜய் சேதுபதி.

Advertisement