பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக பிக் மூன்றாவது வாரம் முடிந்து 26 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கில் முத்து வென்றார். அதற்கு பின் நாமினேஷனில் நேரடியாக அன்ஷிதா, தீபக் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு பின் ஜெப்ரி, ஜாக்லின்,ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் ஆள் மாறாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் மற்றவரை போல மாறி நடித்து காட்ட வேண்டும். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே சிறப்பாக செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதில் சில மன கசப்புகளும், பிரச்சனைகளும் வந்திருந்தது. நேற்று தீபாவளி கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக இருந்தது. இந்த வாரமும் நாமினேஷன் பிரீ பாஸில் பெண்கள் அணி வென்று இருக்கிறது. இதை யாரை காப்பாற்றப் போகிறீர்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்த நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் என்ட்ரியாக இருக்கும் ஐந்து போட்டியாளர்கள் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணவ்:
இவர் விஜயினுடைய தீவிர ரசிகர். விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் பல விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறார்.
ரியா தியாகராஜன்:
இவர் 2023 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் இரண்டாவது ரன்னர் இடத்தை பிடித்திருந்தார். இந்த சீசன் முழுவதையும் இவர் பார்த்து சமூக வலைதளத்தில் விமர்சனமும் செய்து வருகிறார்.
மஞ்சரி:
இவர் பட்டிமன்ற பேச்சாளர். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.
வர்ஷினி வெங்கட்:
இவர் மாடல் அழகி. இவர் பல ஃபேஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். மிஸ் கோல்டன் பேஸ் ஆஃப் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாம் ரன்னர் அப் இடத்தையும் பிடித்திருக்கிறார்.
ரியான்:
இவர் சீரியல் நடிகர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் பனிவிழும் மலர்வனம் தொடரில் நடித்து வருகிறார்.