பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக பிக் மூன்றாவது வாரம் முடிந்து 26 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கில் முத்து வென்றார். அதற்கு பின் நாமினேஷனில் நேரடியாக அன்ஷிதா, தீபக் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு பின் ஜெப்ரி, ஜாக்லின்,ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் ஆள் மாறாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் மற்றவரை போல மாறி நடித்து காட்ட வேண்டும்.
இந்த வாரம் டாஸ்க்:
ஒருவரை போல் மாறி அவர்கள் செய்யும் விதத்தையும், அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயத்தையும் செய்து காட்ட வேண்டும் என்று பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே சிறப்பாக செய்திருந்தார்கள். இதில் சில மன கசப்புகளும், பிரச்சனைகளும் வந்திருந்தது. நேற்று தீபாவளி கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக இருந்தது.
முதல், இரண்டாம் ப்ரோமோ:
போட்டியாளர்களுக்கும் சின்ன சின்ன டாஸ்க் கொடுக்கப்பட்டது. மேலும், முதல் ப்ரோமோவில், இன்றைய வீட்டோட டமால் டுமீல் பட்டாசு யார்? என்று கேட்டவுடன் சுனிதா சொல்கிறார்கள். நமத்து போன பட்டாசு ரஞ்சித் என்கிறார்கள். பின் சௌந்தர்யாவை டார்கெட் செய்து பேசி இருக்கிறார்கள். இதற்கு அவருமே பதில் அடி கொடுக்கிறார். இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷன் பிரீ பாஸில் யாரை காப்பாற்றப் போகிறீர்கள் என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் பெண்கள் அணி ஒவ்வொருவர் பெயரை சொல்கிறது.
மூன்றாவது ப்ரோமோ:
அன்ஷிதா, நான் எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கு இந்த பாஸ் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக பங்களிக்காத இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் எல்லோருமே சாச்சனா, ஜெஃப்ரி பெயரை தான் சொன்னார்கள். பின் அவர்களுக்கு பிக் பாஸ் கண்டிஷன் ஒன்று போடுகிறது.