விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 63 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. கடந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வீடு ஸ்கூலாக மாறி இருந்தது.கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக கலவரம் இல்லாமல் நிகழ்ச்சி நன்றாகவே சென்றது. அதோடு கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை. இந்த வாரம் கிளாசிக் சினிமா, மாடர்ன் சினிமா என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் இருவருக்குமே ஒரு நெக்லஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
அந்த நெக்லஸை திருட போகாமல் பாதுகாப்பது தான் இந்த வார டாஸ்க். இதில் கிளாசிக் சினிமா அணியினர் ஏற்கனவே மாடர்ன் சினிமா இடம் இருந்து நெக்லஸை திருடி விட்டார்கள். அதை ப்ரஜன் திருடி ஒழித்து வைத்திருந்தார். அதேபோல் தங்கள் வசம் இருக்கும் நெக்லசை திருடு போகாமல் கிளாசிக் சினிமா பாதுகாத்து வந்தார்கள். இந்த டாஸ்க்கில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் மோதல்கள் நடந்தது. பிக் பாஸ் கொந்தளித்து எல்லோரையும் திட்டி இருந்தார்.

வெளியேறும் நபர்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி வருகிறது. அதாவது இந்த வாரம் ரம்யா தான் வீட்டு தல ஆனதால் அவர் நாமினேட் ஆகவில்லை. அரோரா, ஆதிரை, வியானா ஆகியோரை தவிர மீதி 11 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதில் சுபிக்ஷா தான் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார். பின் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இந்த வாரம் ப்ரஜன் தான் வெளியேறி இருக்கிறார்.






