பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 14 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 9:
மேலும், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் அதிக பேர் நாமினேட் செய்த போட்டியாளர் பார்வதி தான். அவரை அடுத்து கம்ருதினை தான் நாமினேட் செய்திருக்கிறார்கள். அதற்குப்பின் அரோரா, எப்ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
பின் சில தினங்களுக்கு முன் பிக் பாஸ், இந்த சீசனில் டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் 2வது வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறயிருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் திவாகர் அதிகமான வாக்குகளை பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவரை அடுத்து பார்வதி, கம்ருதீன், ரம்யா ஜோ ஆகியோர்களுக்கும் நல்ல வாக்குகள் கிடைத்திருப்பதால் எவிக்ஷனில் இருந்து தப்பித்து விட்டார்கள்.

வெளியேறும் நபர்:
இவர்களை அடுத்து அப்சரா, எப் ஜே, அரோரா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இதில் அரோரா தான் குறைவான வாக்குகளில் இருந்தார். ஆனால், இவர் காப்பாற்றப்பட்டால் அப்சரா தான் இந்த இரண்டாம் வாரம் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார். காரணம் இவர் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அதனால் இவர் எலுமினேட் ஆனதாக கூறப்பட்டது.






