விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 3ம் நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கியது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா - 3 ,ஆதிரை - 3 , அப்சரா - 3 , பிரவீன் ராஜ் - 3 , பிரவீன் காந்தி - 4 , திவாகர் - 7, கலையரசன் - 12 ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 9:
மேலும், நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விவாதம் காரசாரமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, திவாகரின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் தலைவராக நிற்பதற்கு டாஸ்குகள் வைப்பார்கள். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படும்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டியை அறிவித்தார். அந்த முறை பிக் பாஸ் வீட்டின் தலைவருக்கு பதிலாக தல என்று அழைக்கப்படுவார். பொதுவாக தலைவர் டாஸ்க்கில் வென்றால் அந்த வாரத்திற்காக எலிமினேஷன் ப்ரீ பாசை பெறலாம். ஆனால், இந்த முறை இந்த முதல் தல டாஸ்க்கில் வெற்றி பெரும் நபருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க 15 வாரங்களகான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

தல ரூம் டாஸ்க்:
அதே போல தல போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த வார தல போட்டிக்கு நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும். மேலும் வீட்டின் தலையாக இருக்கும் அவருக்கு தனி அறையும் அளிக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இப்படி பிக் பாஸ் அறிவித்திருப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்குமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அதோடு போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடுகிறார்கள்.






