முதலில் விஸ்வாசம் பிறகு தான் பேட்ட.!பிரபல பிக் பாஸ் போட்டியாளர் பேட்டி.!

0
667
Pettavsvisvasam

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் ரஜினியின் பேட்ட படமும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இரு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் நேற்று மதியம் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. ட்விட்டரில் உலக அளவிலும், தேசிய அளவிலும் முதலிடத்தில் டிரெண்டானது.

அதே போல இதற்கு முன்பாகவே பேட்ட படத்தின் ட்ரைலரும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று நடிகை ஆர்த்தியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆர்த்தி கண்டிப்பாக விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார். நடிகை ஆர்த்தி தல அஜித்தின் தீவிரமான ரசிகை என்பதை பல முறை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.