பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகி இருக்கும் அதிரடி ப்ரோமோ தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 11 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 9:
மேலும், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் அதிக பேர் நாமினேட் செய்த போட்டியாளர் பார்வதி தான். அவரை அடுத்து கம்ருதினை தான் நாமினேட் செய்திருக்கிறார்கள். அதற்குப்பின் அரோரா, எப்ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இந்த சீசனில் தலைவர் பதவியில் வென்றவருக்கு தனியாகவே ரூம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் 9 ப்ரோமோ:
அதற்கு தல ரூம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் வென்றவர் 15 வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த டாஸ்க்கில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். இப்படி இருக்கும் நிலையில் துஷாருடைய பதவி பறிக்கப்பட்டிருக்கும் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிக் பாஸ் கோபப்பட்டு, ஒவ்வொரு சீசனிலும் அந்த வீடு ஒவ்வொரு விஷயத்துக்காக ஃபேமஸ் ஆக இருக்கும்.
https://youtu.be/NMuKwg9KFFI?si=6--D7yOeaSOKu2Y_
தல ரூம் பதவி:
இந்த சீசனில் நோ டிசிபிலினுக்கு ஃபேமஸ் ஆக இருக்கிறது. தூங்குவது, மைக் மாட்டாமல் இருப்பது என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதில் தல துஷாரே மைக் மாட்டுவதில்லை. அப்போ எப்படி மத்தவர்கள் டிசிப்ளீனாக கொண்டு வருவீங்க? டிசிப்ளின் இல்லாத வீட்டுக்கு வீட்டு தலயும் தேவையில்லை. வீட்டு தல பதவி உங்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது என்று கூறியதால் போட்டியாளர்கள் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.






