தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். வீட்டுக்குள் சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் சென்று விட்டது.

இன்று நிகழ்ச்சி முதல் நாள் அமோகமாக தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 9:
இந்த நிலையில் இன்று முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதில் போட்டியாளர் ஆதிரை அவர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்து இருக்கிறார்கள். அதில் கலையரசன் - இதுக்கு முன்னாடி அவர முன்ன பின்ன தெரியாது. இங்க அவர் ஒரு விஷயம் சொன்னார். நானும் என் மனைவியும் கன்டன்ட்காக நிறைய விஷயம் பண்ணி பேமஸ் ஆனோம். அப்படி கண்டன்ட்காக என்ன வேணா பண்றவங்காள இங்க போடுவாங்கன்னா என்னால ஏத்துக்க முடியாது. அதுனால அவருக்கும் இங்க இருக்க தகுதி இல்ல

ஆதிரை சொன்னது:
திவாகர் - இந்த இடத்துக்கு வர நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க. ஆனா இந்த உலகத்துல என்ன வேணா பண்ணலாம், அப்படி பண்ணா இந்த இடத்துக்கு கொண்டு வந்து விட்ருவாங்கன்னு உதாரணமா இவர் இருக்கார். அவரு இந்த இடத்துக்கு வரதுக்கு தகுதியே இல்ல. இப்படி இவர் சொன்ன இரண்டு பேருக்குமே சமூக வலைத்தளங்களில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. இவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததிலிருந்தே மக்கள் இவர்களெல்லாம் போட்டியாளர்களா? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

நாமினேஷன் லிஸ்ட்:
அதோடு மக்களின் மனதில் இருப்பதை ஆதிரை சொல்லியிருப்பதால் எல்லோருமே அவரை பாராட்டுகிறார்கள். இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்ற பெயரில் திவாகர், கலையரசன் இருப்பதால் இந்த வாரத்தின் இறுதியில் இவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. வியானா - 3 ,ஆதிரை - 3 , அப்சரா - 3 , பிரவீன் ராஜ் - 3 , பிரவீன் காந்தி - 4 , திவாகர் - 7, கலையரசன் - 12 ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்கள்.






