பிக் பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் அசீன் விஜய் டிவி சீரியலில் கமிட்டாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அசீம். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து மீடியாவில் நுழைந்தார்.முதல் முதலில் மூன் டிவியில் ஆன்கர் ஆக தனது கேரியரை தொடங்கினார் அசீம்.

தொடர்ந்து சில சீரியல்களில் நடித்த இவருக்கு, சன் டிவியில் ஒளிபரப்பான 'பிரியமானவள்' தொடர் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு குதித்த அசீம், தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு போன்ற சீரியல்களில் நடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். 'பகல் நிலவு' சீரியல் மூலம் அசீமுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. குறிப்பாக நிறைய பெண் ரசிக்கைகளை தன் நடிப்பின் மூலம் இவர் சேர்த்தார்.
அசீம் நடித்த சீரியல்கள்:
அதற்குப் பின் கடைக்குட்டி சிங்கம், நிறம் மாறாத பூக்கள் போன்ற சீரியல்களில் நடித்த இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'பூவே உனக்காக' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளாக கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே சீசன் 5 இல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 இல் தான் வாய்ப்பு கிடைத்திருந்தது.

பிக் பாஸ் சீசன் 6:
மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அசீம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் கிளம்பியது. இதனால் கமல் பலமுறை அசீமிற்கு வார்னிங் கொடுத்திருந்தார். இதனால் இவர் இறுதி வரை வருவாரா என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று கமல் சொல்வதற்கு ஏற்ப அசீம் டைட்டில் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நாயகன்:
இந்த நிகழ்ச்சிக்கு பின் அசீம் 'மக்கள் நாயகன்' என்ற பட்டத்தை தனக்குத்தானே போட்டுக் கொண்டு எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான ஆட்களை அழைத்துக் கொண்டு வெற்றி கோப்பையும் எடுத்துக்கொண்டு ஃபோட்டோ எடுக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள் . பிறகு அசீம் ஹீரோவாக படத்தில் கமிட்டாகி உள்ளதாக சில தகவல்கள் வந்தன. அதேபோல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தான் அசீம் நடிக்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.

அசீம் நடிக்கும் சீரியல்:
இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் அசீம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'ஈரமான ரோஜாவே' சீரியலை தயாரித்த நிறுவனம் தற்போது புது சீரியல் தயாரிக்கிறார்களாம். அந்த சீரியலில் ஹீரோவாக அசீம் கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அசீமின் ரசிகர்கள் உற்சாகமாக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.






