விஜய் சாரின் தவெக கட்சியில் சேரப் போறேன் என்று பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல்:
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக கூறி இருந்தார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே கொடி ஏற்றும் விழா நடைபெறும் என்று கூறப்பட்டது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்திருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சி கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது.
Ok I will end it here , I hate dmk!
— Balaji Murugadoss (@OfficialBalaji) August 22, 2024
I hate dynasty politics
I’m gonna join tvk!
Dei Upiss I’m gonna join Vijay sarr
தவெக கொடியேற்றும் விழா:
இந்நிலையில், பிரம்மாண்டமாக கொடி ஏற்றும் விழாவை நடத்த போலீசார் அனுமதி கொடுக்க மறுத்ததால், விஜய் தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் கொடி ஏற்றும் விழா குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்டது போல், ஆகஸ்ட் 22, 2024 கொடியேற்றும் விழா சிறப்பாக நடந்தது. அதோடு, தமிழக வெற்றி கழகத்தின் பாடலையும் வெளியிட்டனர்.
பாலாஜி முருகதாஸ் பதிவு:
இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பாலாஜி முருகதாஸ், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக அறிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் திமுக தொண்டர்களுடனும் தனது எக்ஸ் தளத்தில் மல்லுக்கட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், நான் திமுகவை வெறுக்கிறேன், வாரிசு அரசியலை நான் வெறுக்கிறேன், நான் தவெக கட்சியில் சேரப் போகிறேன், விஜய் சார் கட்சியில் சேர போகிறேன் என்று திமுகவினரை வம்புக்கு இழுத்துள்ளார்.
நெட்டிசன்களின் கமெண்டுகள்:
அதனைத் தொடர்ந்து, பாலாஜி முருகதாஸின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கமெண்ட்டுகளில் வறுத்தெடுத்து வருகின்றனர். அதற்கும் பாலாஜி முருகதாஸ், என் தாத்தா பாட்டி உங்களுக்கு வாக்களித்தார்கள், நான் கேட்பது தமிழ்நாடு என்ன உங்க சொத்தா? என்னால் அதைப் பற்றி பேசக்கூட முடியாதா? திமுக பெரிய இழப்பை சந்திக்க போகிறது. அதற்கும் நான் தான் காரணமாக இருக்கப் போகிறேன் என்று பதிலடி கொடுத்து வருகிறார். தற்போது இவரின் பதிவுகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.