ஜூலிக்கு தொகுப்பாளி வாய்ப்பு யாரு வாங்கிகொடுத்தாங்க தெரியுமா..? கண் கலங்கிய ஜூலி !

0
4139
julie
- Advertisement -

என்ன திடீர்னு ஜூலியைத் தொகுப்பாளராகக் கொண்டுவந்திருக்கீங்க?
இவ்வளவு நாள் இருந்த சஞ்சீவுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், புதுமுகம் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணுச்சு. அதில் என் முதல் சாய்ஸ், ஜூலியாக இருந்தாங்க. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்கூட ‘ஆங்கராக ஆகணும்’னு அவங்க ஆசையைச் சொல்லியிருந்தாங்க. அதனால், அவங்களைக் கூப்பிட்டேன்.
Julie நீங்க பேசினதும் என்ன ஃபீல் பண்ணினாங்க?
ஜூலி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நான் ஒரு காலேஜூக்குப் போயிருந்தேன். அங்கே ஜூலி டான்ஸ் முடிச்சுட்டு பேச ஆரம்பிச்சதும் கத்தி கூச்சல் போட்டாங்க. அதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்தப் பொண்ணுக்கு நாம ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. எனக்குத் தெரிஞ்சு ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்துக்கிட்ட எல்லாருமே வசதியானவங்க. ஜூலியின் அப்பா ஆட்டோ ஓட்டுகிறவர். ஜூலிகிட்ட திறமை இருக்கு. அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாமேனு நினைச்சேன். என்னைச் சந்திக்கும்போது பயந்துக்கிட்டே பேசினாங்க. தட்டிக்கொடுத்து, ‘ஜூலி பயப்படாதே. இப்போ, வேலை எதுவும் செய்றியா?’னு கேட்டேன். ‘இல்லை’னு சொன்னாங்க. ‘உங்களுக்கு ஆங்கரிங்னா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன். வாய்ப்பு இருக்கு பண்ணு’னு சொன்னேன். சந்தோஷமாக ஏத்துக்கிட்டாங்க. ஆனால், அவங்களுக்கு ஒரு வருத்தம் இருந்துச்சு.

-விளம்பரம்-

இதையும் படிங்க: கலா மாஸ்டர் போன் பண்ணி கேட்டாங்க ok சொல்லிட்டேன் – ஜூலி

- Advertisement -

என்ன வருத்தம்?
எல்லோரும் என்னை நெகட்டிவாகப் பார்க்கும்போது, நீங்க அதுபற்றி எதுவுமே கேட்கலையே’னு கேட்டாங்க. ‘எனக்கு மத்தவங்களோட பர்சனல் தேவையில்லை. அவங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு இருந்தால் போதும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நம்ம நெகட்டிவை, பாசிட்டிவாக மாற்றக்கூடிய வழியை ஏற்படுத்திக்கணும்’னு சொன்னேன். ஜூலி கண் கலங்கிட்டாங்க. எத்தனையோ பேர் எனக்கு வழிகாட்டியா இருந்தாங்க. இப்போ, ஜூலிக்கு நான் வழிகாட்டியாக இருக்கப்போறேன். சேனலும் எனக்கு முழு பர்மிஷன் கொடுத்தாங்க. ஜூலி ஸ்டேஜ் ஏறினதும், ஆரம்பத்தில் பயம் இருந்துச்சு. போகப்போக சரியாயிடுச்சு. முதல்ல ஒரு டான்ஸ் பர்ஃபாமன்ஸோடு ஆரம்பிச்சு, ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
Julie இரண்டு எபிசோடு முடிச்சுட்டீங்க… ஜூலிகிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம்.
வெளியில் மத்தவங்க எப்படிப் பார்க்கப்போறாங்கன்னு தெரியாது. நான் பார்த்தவரை ‘ஓடி விளையாடு பாப்பா’ செட்ல அவ்வளவு டிசிப்பிளினா இருந்தாங்க. என்னைப் பொறுத்தவரை ஃபேமஸே இல்லாதவங்களை வெளியில் கொண்டுவரணும் அவ்வளவுதான். ரஜினி, கமலை எல்லோருக்கும் பிடிச்ச காலத்தில், எனக்கு ரகுவரனைப் பிடிக்கும். அந்த மாதிரிதான் ஜூலியைப் பிடிச்சவங்களும் நிறைய பேர் இருக்காங்க. எங்க செட்ல இருக்கிற குழந்தைகள் முதல் டெக்னீஷியன் வரை எல்லோர்கிட்டேயும் ஜூலியை யாரும் காயப்படுத்தற மாதிரி பேசக் கூடாதுனு சொல்லியிருக்கேன்.

முதல் நாள் ஷூட்டிங்குக்கு ஜூலியின் பெற்றோர் வந்தாங்களாமே.

-விளம்பரம்-

ஆமாம்! முதல் நாள் ஷூட்டிங்கைப் பார்த்த ஜூலியின் பெற்றோர் பூரிச்சுப்போயிட்டாங்க. அவங்க அம்மா கையெடுத்துக் கும்பிட்டபோது என் கண்கள் கலங்கிடுச்சு. ஜூலியிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், இப்போ பிக்அப் ஆகிட்டாங்க. என்மீது ஒரு பயம் இருந்துட்டே இருக்குபோல.
Julie தவறாகச் செய்தால், சரிபண்ணிக்கலாம் கவலைப்படாதே’னு சொல்லியிருக்கேன். ஃபேஸ்புக்ல ‘அடுத்த ஓடி விளையாடு பாப்பா’ தொகுப்பாளர் யார்னு போட்டதும்’, ஜூலி ஜூலினு நிறைய பேர் சொன்னாங்க. என் சாய்ஸூம் அதுவாகத்தான் இருந்துச்சு. ‘எல்லாரும் நெகட்டிவைப் பற்றி கேட்கிறாங்க. ஆனா, கலா மாஸ்டர் கேட்க மாட்றாங்களே’னு வருத்தப்படுறாங்க ஜூலி. நான் தெளிவாகச் சொல்லிட்டேன். ‘உங்க பர்சனல் வேண்டாமே’னு” என்கிறார் கலா மாஸ்டர

Advertisement